கடற்படையில் மாலுமி பணி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 7, 2019

கடற்படையில் மாலுமி பணி

இந்திய கடற்படையில் செய்லர் (எஸ்.எஸ்.ஆர். - பிப்ரவரி 2020) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 2200 பேரும், செய்லர் (ஏ.ஏ. - பிப்ரவரி 2020) என்ற பயிற்சிப் பிரிவில் 500 பேர் என 2700 பயிற்சியுடன் கூடிய மாலுமி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 முடித்து திருமணமாகாத இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுன்றன.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.02.2000 மற்றும் 31.01.2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.

தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பயிற்சி காலம்: 22 வாரம்

உடல் தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடனும், கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் பார்வைத்திறன் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10-7-2019

No comments:

Post a Comment