பி.எட்., கல்லுாரிகள், கூடுதல் கட்டணம் வசூலிக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், 700 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன
. அவற்றில், பி.எட்., - எம்.எட்., பட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளின், 65 சதவீத இடங்கள், தமிழக அரசின் கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன
.சுயநிதி கல்லுாரிகள் மட்டும், தனித்தனியாக மாணவர்களை சேர்த்து கொள்கின்றன. மாணவர் சேர்க்கைக்கு, கல்லுாரிகள் வழங்கும் விண்ணப்பங்களுக்கு, 1,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல, கல்வி கட்டணமும், லட்சக்கணக்கில் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், விண்ணப்ப கட்டணம் மற்றும் கல்வி கட்டணத்தை அதிகம் வசூலிக்க கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை, அனைத்து கல்லுாரிகளுக்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.
கல்லுாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
கட்டண வசூல் குறித்து புகார் வந்தால், அந்த கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.

No comments:
Post a Comment