நீட் விலக்கு கோரும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அதற்கு அவசியம் இல்லை என சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய நிலையில், சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு கோரும் மசோதா 27 மாதங்கள் கிடப்பில் போடப்பட்டு, நிராகரிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மத்திய அரசை கண்டித்து அவையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் தேர்வு முறை கொண்டுவரப்பட்டது என குற்றம்சாட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வரலாற்றை மறைத்து பேசுவதாக கூறினார். ப.சிதம்பரத்தின் மனைவிதான் நீட் தேர்வு வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடியவர் என்றும், இப்போது நீட் வேண்டாம் என சட்டமன்றத்தில் காங்கிரஸ் எப்படி பேசுகிறது என்பதை விளக்க வேண்டும்என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.
நீட் விலக்கு கோரிய மசோதா என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து அதை சரி செய்து மீண்டும் மத்திய அரசை வலியுறுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார். இதற்காக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் சி.வி.சண்முகம் கூறினார்.
சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

No comments:
Post a Comment