கால்நடை மருத்துவப்படிப்பு பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 25, 2019

கால்நடை மருத்துவப்படிப்பு பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

சென்னை வேப்பேரி அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் நேற்று காலை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கியது. இது வரும் 27-ம் (நாளை வரை) தேதி வரை நடைபெறுகிறது.


இன்று பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.  சென்னை வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது. இந்த கலந்தாய்வு வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.


கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நேற்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தேர்வு குழு தலைவரும் பேராசிரியருமான செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.


கால்நடை பட்டப் படிப்புக்கான மொத்த இடங்கள் 360 ஆகும். அகில இந்திய ஒதுக்கீடு 54 இடங்கள் போக, தமிழகத்துக்கு 306 இடங்கள் கிடைக்கும். இதில் 25 இடங்கள் சிறப்பு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோழியின தொழில் நுட்ப படிப்புக்கு 40 இடங்கள் உள்ளன. இதில் சிறப்பு பிரிவினருக்கு 4 இடங்கள் உள்ளன. உணவு தொழில்நுட்ப படிப்புக்கு 40 இடங்கள் உள்ளன.


இதில் 4 இடங்கள் சிறப்பு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பால் வள தொழில்நுட்ப பிரிவில் 20 இடங்கள் உள்ளன.


இவற்றில் சிறப்பு பிரிவினருக்கு 3 இடங்கள் ஆகும். இன்று பொது பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.


கால் நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தர வரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்குகிறார்

No comments:

Post a Comment