சீனாவில் நடைபெற்ற போட்டி: மதுரை மாணவி தங்கம் வென்று அசத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

சீனாவில் நடைபெற்ற போட்டி: மதுரை மாணவி தங்கம் வென்று அசத்தல்

சீனாவில் நடைபெற்ற காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் மதுரையை சேர்ந்த மாணவி தங்கம் வென்று அசத்தி இந்தியாவிற்கு பெருமை சேர்ந்துள்ளார். மேலும் இதை தொடர்ந்து மாணவி ஜெர்லின் அனிகாவிற்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

 இதை அடுத்து சீனாவில் நடைபெற்ற காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற மதுரை மாணவிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்திய சார்பில் பங்கேற்று விளையாடிய மதுரையை சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார். இதை தொடர்ந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய அனிகாவிற்கு பெற்றோர் மற்றும் உறவினர் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும் இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஜெர்லின் அனிகாவின் தந்தை அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெற்று தமது நாட்டிற்கு பெருமை சேர்த்திடுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.


மேலும் அவர் தனது மகள் 8 வயது முதல் பேட்மிண்டன் விளையாடுவதாகவும், மேலும் தனது மகள் காதுகேளாதவர் ஆகினும் புத்தி கூர்மையால் இப்பதக்கத்தை பெற்றுள்ளார் எனவும் தெரிவித்தார்.


மேலும் அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொண்டு வெற்றிப்பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே தனது மகளின் ஒரே இலக்காக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும் அவரது நம்பிக்கையும், விடாமுயற்சியும் கண்டிப்பாக வெற்றியை பெற்று தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment