*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்*
1⃣0⃣-0⃣7⃣-1⃣9⃣
*இன்றைய திருக்குறள்*
வான் சிறப்பு
குறள் - 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
*மு.வ உரை*:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
*சாலமன் பாப்பையா உரை*:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்
*கலைஞர் உரை*:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
*பொன்மொழி*
Do not bury a good thought in a multitude of words.
வளவளவென்று பேசி நல்ல கருத்துக்களைக் குழிதோண்டி புதைத்துவிடாதீர்கள்.
*உடல் நலம்*
ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.
*பொது அறிவு*
1. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
*பேரீச்சை மரம்*
2. நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை என்னவென்று அழைப்பர்?
*கூகோல்*
3. விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?
*இத்தாலி*
4. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?
*சகுந்தலா தேவி*
*Today's grammar*
*Forms of verbs*
There are two special forms for verbs called voice:
1.Active voice
2.Passive voice
The active voice is the "normal" voice. This is the voice that we use most of the time. You are probably already familiar with the active voice. In the active voice, the object receives the action of the verb:
*Example*
Cats eat fish.
The passive voice is less usual. In the passive voice, the subject receives the action of the verb:
*Example*
Fish are eaten by cats.
The object of the active verb becomes the subject of the passive verb:
*Important Used Words - Household*
Cot கட்டில்
Cobweb சிலந்தி கூடு
Censer சாம்பிராணி
போடும் கூடு
Bed படுக்கை
*அறிவோம் தமிழ்*
*ஒற்றை மேற்கோள் குறி (‘)*
ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இடங்களிலும், சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற இடங்களிலும் ஒற்றை மேற்கோள் குறி. இடவேண்டும்.
*இன்றைய கதை*
*போலி நோட்டு புரியாத புதிர்*
ஒரு பெண் கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினாள். கடை முதலாளியும் இலாபம் ஏதும் இன்றி அவ்விலைக்கு விற்க 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்தாள் அவள்.
அதை கவனிக்காத கடைகாரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்கி வந்தார்.
திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்து போலி நோட்டை அடையாளங்கண்ட பக்கத்து கடைகாரர் முதல் கடைக்காரரிடம் வந்து இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி கொடுத்துவிட்டு 1000 ரூபாய் தூய நோட்டாக வாங்கி சென்றார். முடிவில் முதல் கடைகாரருக்கு எவ்வளவு நஷ்டம்?
*விடை* :
விடை 1000 ரூபாய் ஆகும். சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்கிய முதல் கடைகாரர்இ முடிவில் அப்படியே திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
இங்கு இரு கடைக்காரர்களிடமும் எவ்வித வியாபாரமும் நடக்கவில்லை. எனவே பக்கத்து கடைக்காரரிடம் எவ்வித நட்டமுமில்லை.
அப்பெண்ணிடம் பொருளாக 200 ரூபாவும்இ பணமாக 800 ரூபாவும் ஆக மொத்தம் 1000 ரூபாய் நட்டமடைந்தார்.
*செய்திச் சுருக்கம்*
🔮கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் நீர்திறக்க முதல்வர் குமாரசாமி ஒப்புதல்.
🔮புதுச்சேரியிலிருந்து விஜயவாடா வழியாக டெல்லிக்கு தினசரி விமான சேவை தொடங்க ஏர் ஷபா நிறுவனம் முடிவு.
🔮தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
🔮அசாமில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றிய 11 வயது சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
🔮கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
🔮காஞ்சிபுரம் , அத்திவரதரை காண பக்தர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், தரிசன நேரத்தை கோவில் நிர்வாகம் 2 மணி நேரம் நீட்டித்துள்ளது.
*தொகுப்பு*
T. தென்னரசு,
தமிழ்நாடு டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

No comments:
Post a Comment