ஆங்கில வழி கல்வி கட்டணத்திற்கு விலக்கு அளித்ததால், தலைமை ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தமிழ் வழிக்கு, கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை
.ஆங்கில வழி மாணவர்களுக்கு மட்டும், 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த கட்டணத்தையும், மாணவர்களிடம் வசூல் செய்ய முடிவதில்லை.
ஆனால், ஆங்கில வழி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என, பள்ளி கல்வி துறைஅறிவுறுத்துகிறது
மேலும், பல ஆண்டுகளாக கட்டணத்தை செலுத்த முடியாத, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, அந்த தொகையை செலுத்துமாறு, காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் செலவு தொடர்பான தணிக்கையிலும், தலைமை ஆசிரியர்கள் பணம் செலுத்த வேண்டியதை குறிப்பிடுவதால், ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் சலுகைகள் பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.இதனால், ஆங்கில வழி மாணவர்களுக்கான, கல்வி கட்டணத்தை ரத்து செய்ய, பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, கட்டணத்தை ரத்து செய்வதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதனால், ஆங்கில வழி கல்வி கட்டணம் தொடர்பான, தணிக்கை தடை பிரச்னையில் இருந்து, தலைமை ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துஉள்ளனர்.

No comments:
Post a Comment