மொபைல் போனில் பேசி கொண்டே மொபைல் நம்பரை எப்படி சேமிப்பது? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

மொபைல் போனில் பேசி கொண்டே மொபைல் நம்பரை எப்படி சேமிப்பது?

நாம் பயன்படுத்தக்கூடிய மொபைல் போனில் பல விதமான அம்சங்கள் இருந்தாலும் சில பல குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.


அந்த வகையில் நாம் மற்றவர்களை தொடர்பு கொண்டு இருக்கும்போது அவர்கள் கூறக்கூடிய சில விதமான செய்திகளையோ அல்லது போன் நம்பரையும் நம்மால் தொடர்பு கொண்டு இருக்கும்போதே குறித்து வைக்க முடியாமல் பொய் விடுகிறது மேலும் அந்த வகையில் நாம் எப்பொழுதும் பேனா மற்றும் நோட்டு புத்தகத்தை எடுத்து கொண்டே போவதில்லை.


மேலும் நாம் கால் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அந்த நம்பரை சேமித்து வைத்து கொள்ளும் வகையில் ஒரு சூப்பரான ஆப்பை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

கால் ரைட்டர் (Call Writer)

கால் ரைட்டர் (Call Writer) இது ஒரு நிஃப்டி ஆப் ஆகும்.

இதனை பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதனை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ததும் செட்டிங்ஸ் மெனு செல்ல வேண்டும்.


இந்த ஆப்ஷன் ஸ்க்ரீனில் மேல்புறம் இடதுபக்கமாக காணப்படும். செட்டிங்ஸ் ஆப்ஷனில் உங்களது விருப்பத்தை அழைப்பின் போது எச்சரிக்கை வழங்க செட் செய்ய வேண்டும்.

 பின் கலீல் இருக்கும் போது செயலியின் ஐகானா தானாக திறக்கும். இனி செயலியை க்ளிக் செய்யும் போது குறிப்புகளை எடுக்க நோட்ஸ், நம்பர் போன்ற ஆப்ஷன்கள் தோன்றும்.


 இவற்றை க்ளிக் செய்து விவரங்களை குறித்துக் கொள்ளலாம். பின் செயலியில் இருந்து நீங்கள் குறித்து வைத்த விவரங்களை எடுத்துக் கொள்ளலாம்.


அன்றாட பணியில் அதிகளவு குறிப்பு மற்றும் எண் சார்ந்த விவரங்களை இயக்குவோருக்கு கால் ரைட்டர் சிறப்பான செயலியாக இருக்கும்

ரைட் நௌ (Write Now)


பிளே ஸ்டோரில் கிடைக்கும் மற்றொரு இலவச ஆப் இது.

 இந்த ஆப் கால் ரைட்டர் செயலியை போன்றே இயங்கும். எனினும், இது சற்று வித்தியாசமாக தெரியும். ஆப் இன்ஸ்டால் செய்ததும், ரீஜியன் டெஸ்ட் செய்ய வேண்டும்.


இது நீங்கள் எவ்வளவு சரியாக ஸ்வைப் செய்தால் விட்ஜெட்டை கொண்டு வரும் என்பதை தீர்மானித்துக் கொள்ளும். இந்த விட்ஜெட் பென்சில் வடிவில் இருக்கும்.


இதனை இடதுபுறமாக ஸ்வைப் செய்தால் செயலி திற்ககும். இனி நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டிய விவரங்களை பதிவிடலாம். பின் ஆப் திறந்து குறித்து வைத்த விவரங்களை பயன்படுத்தலாம்.

ரைட் நௌ (Write Now)
பிளே ஸ்டோரில் கிடைக்கும் மற்றொரு இலவச ஆப் இது.

 இந்த ஆப் கால் ரைட்டர் செயலியை போன்றே இயங்கும். இருப்பினும் , இது சற்று வித்தியாசமாக தெரியும். செயலியை இன்ஸ்டால் செய்ததும், ரீஜியன் டெஸ்ட் செய்ய வேண்டும்.


இது நீங்கள் எவ்வளவு சரியாக ஸ்வைப் செய்தால் விட்ஜெட்டை கொண்டு வரும் என்பதை தீர்மானித்துக் கொள்ளும். இந்த விட்ஜெட் பென்சில் வடிவில் இருக்கும். இதனை இடதுபுறமாக ஸ்வைப் செய்தால் செயலி திற்ககும்.


 இனி நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டிய விவரங்களை பதிவிடலாம். பின் செயலியை திறந்து குறித்து வைத்த விவரங்களை பயன்படுத்தலாம்.

கலர் நோட் (Color Note)


கலர் நோட் கால்களுக்கென உருவாக்கப்பட்ட ஆப் ஆகும். ஆப் ஸ்டோரில் கிடைக்கும் குறிப்பு எடுக்கும் செயலிகளில் இது மிகவும் பிரபலம்.


கால்களை இயர்போன் வாயிலாக மேற்கொள்வோர் செயலியின் ஐகானை க்ளிக் செய்து குறிக்க வேண்டிய விவரங்களை பதிவிட்டுக் கொள்ளலாம்.


 இதுதவிர கலர் நோட் செயலியில் மெமோக்கள், ஈமெயில்கள் , மளிகை விவரம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து கொள்ள முடியும். இத்துடன் ரிமைண்டர் செட் செய்து கொள்ளலாம்

No comments:

Post a Comment