அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 26, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்

கதிராமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர், கரும்பலகையில் விடை எழுதியும் அசத்தினார்.

 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கதிராமங்கலத்தில் கடந்தாண்டு அரசு உயர்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது. இந்த பள்ளியில் 52 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.


இந்த பள்ளியில் கலெக்டர் அண்ணாதுரை நேற்று ஆய்வு செய்தார். அப்போது 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வகுப்பறைக்கு, கலெக்டர் அண்ணாதுரை சென்றார்.


பின்னர் மாணவர்களிடம் கணித பாடம் குறித்த விளக்கங்களை அளித்தார். மேலும் மாணவர்களுக்கு கணித வகுப்பு நடத்தினார். அப்போது வட்டத்தின் விட்டம் குறித்து மாணவர்களிடம் கேள்வி கேட்டபோது சரியான பதில் வரவில்லை.


இதனால் கலெக்டரே கரும்பலகையில் வட்டத்தின் விட்டம் குறித்து விளக்கம் அளித்து பாடம் நடத்தினார். மேலும் கணித பாடத்தை அவசியம் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் மேல்நிலை வகுப்புகளில் படிக்க உதவியாக இருக்கும் என்றார்.


இதைத்தொடர்ந்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாணவர்களை அதிகளவில் பள்ளியில் சேர்க்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கலெக்டர் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார். மேலும் பள்ளிக்கு தேவையான நாற்காலி, மேஜை உள்ளிட்ட தளவாட பொருட்களை உடனடியாக வழங்க வேண்டுமென வட்டார வளர்ச்சி ஆணையர்களுக்கு உத்தரவிட்டார்.


இதைதொடர்ந்து கதிராமங்கலம் ஓட்டக்கா திடலில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணி, அரசு உயர்நிலைப்பள்ளி அமையவுள்ள இடத்தை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். அப்போது அரசு உயர்நிலைப்பள்ளி கட்டப்படவுள்ள இடம் குறித்து உடனடியாக விஏஓ அளந்து முறைப்படுத்த உத்தரவிட்டார்

No comments:

Post a Comment