சென்னை கிண்டியில் இன்று அரசு வேலைவாய்ப்புத் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம் கிண்டி-ஆலந்தூர் சாலையில் உள்ள கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது
இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளதாகவும், படித்த வேலையில்லாத நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment