ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் விருதுநகர் கிளையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technician Gr-II (Electrical) - 01

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்று என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 'சி' உரிமம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Driver - 01

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager (Veterinary) - 01

சம்பளம்: மாதம் ரூ.55,500 - 1,75,700

தகுதி: Veterinary Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Veterinary Council-லில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager, Virudhunagar District Co-operative Milk Producers
Union Limited, Srivilliputtur.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.08.2019

No comments:

Post a Comment