குடும்பத்தில் சண்டைபோட்டால் விடுமுறையுடன் சம்பளம்! வருகிறது புது சட்டம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 18, 2019

குடும்பத்தில் சண்டைபோட்டால் விடுமுறையுடன் சம்பளம்! வருகிறது புது சட்டம்!

வீட்டில் சண்டை ஏற்பட்டால் அதில் இருந்து வெளிவர ஆண்டுக்கு 10 நாட்கள் விடுமுறையும், அந்த நாட்களுக்கான சம்பளத்தையும் வழங்கவேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது நியூசிலாந்து அரசு.

அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பனர் ஜான் லோகி கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்தில் சண்டை போட்டு பிரிந்து செல்பவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை விட வேண்டும் என போராடி வந்துள்ளார்.


சமீபத்தில் பாராளுமன்றத்தில் இதனை அவர் முன்மொழிய 63 உறுப்பினர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்க, 57 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


அதிகமான உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததால் இந்த சட்டம் நியூசிலாந்து அரசால் ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது


இந்த சட்டத்தின்படி குடும்ப சண்டையால் பாதிக்கப்பட்டவர் பணியாற்றும் நிறுவனம் அவருக்கு துணைநின்று அவர் பிரச்னை தீரும் வரை 10 நாள் சம்பளத்துடன் விடுப்பு மற்றும் அவர் பணிக்கு திரும்பியதும் இரண்டு மாத காலம் அவரின் வசதிக்கு தகுந்தபடி பணி நேரங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment