சென்னையில் கனமழை எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 21, 2019

சென்னையில் கனமழை எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக சில மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை22) கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது.

 தமிழகத்தில் வங்க கடலின் மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக இன்றும் நாளையும் சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 புதுச்சேரியிலும் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.


நேற்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி கோவை அடுத்த சின்ன கல்லாரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


பூண்டி நீலகிரி தேவாலாவில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு கனமழை ரெட் அலர்ட்

கேரளாவில்  கனமழை நேற்றும் நீடித்தது. இதையடுத்து  நாளில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக  உயர்ந்துள்ளது.

  3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த 3 நாட்களுக்கும்  மேலாக  பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.


 குறிப்பாக  காசர்கோடு, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து  வருகிறது.


 நாளை வரை காசர்கோடு, வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த  நாட்களில் மழைக்கு பலியானோர்  எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.


கனமழை காரணமாக  கேரளா முழுவதும் 7 மாவட்டங்களில் வெள்ள நிவாரண முகாம்கள்  திறக்கப்பட்டுள்ளன. இதில் 165 குடும்பங்களை சேர்ந்த 835 தங்க  வைக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment