அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு..: தமிழக அரசு அரசாணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 31, 2019

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு..: தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கம் கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தற்போதைய நிலவலரப்படி தமிழகம் முழுவதுமுள்ள 35,000 அரசுப் பள்ளிகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.


இதில் முழுமையாக தமிழ் வழியில் கல்வி பெறும் மாணவர்களுக்கு முற்றிலும் இலவச கல்வி வழங்கப்படு வருகிறது. அதேவேளையில், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.



அதாவது, 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக 200 ரூபாயும், 9 மற்றும் 10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 250 ரூபாயும், 11 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாயும் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து கடந்த 29ம் தேதியன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை, தற்போது வெளியாகியுள்ளது. இந்த அரசாணையின் மூலம் 6 முதல் 12ம் வகுப்புகள் வரை ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment