சமூக வளைதளங்களில் தினம் ஒரு திருக்குறள்: எழுத்து, இசை வடிவில் பொருள் விளக்கம் அளிக்கும் தமிழாசிரியர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

சமூக வளைதளங்களில் தினம் ஒரு திருக்குறள்: எழுத்து, இசை வடிவில் பொருள் விளக்கம் அளிக்கும் தமிழாசிரியர்

மனப்பாடப் பகுதியாக மட்டுமே திருக்குறளை படித்து வந்த மாணவர்கள் பொருள் புரிந்து எளிதாக மனதில் பதியவைக்கும் வகையில் தினம் ஒரு திருக்குறளை எழுத்து, இசை வடிவில் உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் தமிழாசிரியர் ஜெயச்சந்திரன் (38).

சிவகாசியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதுகலை தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்த இவர், வாழ்க்கை நெறிமுறைகளைக் கூறும் திருக்குறளை எளிதாக மாணவர்களிடமும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக திருக்குறளை எழுத்து, இசை வடிவில் அதன் பொருள் விளக்கும் வகையில் எடுத்துக்கூறி, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்

தமிழகம் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு தமிழாசிரியர் ஜெயச்சந்திரனின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.



பல பள்ளிகளில் காலையில் நடத்தப்படும் இறைவணக்கக் கூட்டத்தில் தமிழாசிரியர் ஜெயச்சந்திரன் அன்று வெளியிடும் குறள் திரையிட்டுக் காட்டப்படுவது வழக்கமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, தமிழாசிரியர் ஜெயச்சந்திரன் கூறுகையில், "தமிழ் மீது கொண்ட ஆர்வம் மற்றும் வள்ளுவத்தின் மீது கொண்ட பற்று என்னைத் தூண்டியது.

புத்தகத்தில் மனப்பாடப் பகுதியாக மட்டுமே திறக்குறளை மாணவர்கள் வாசிப்பதைப் பார்க்கையில் மனதுக்குள் பல கேள்விகள் எழுந்தன. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நெறிமுறைகளும் வள்ளுவத்தில் கூறப்பட்டுள்ளன.


 வள்ளுவத்தைப் பின்பற்றியவன் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தைப் பெற முடியும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறளை மாணவர் எளிதாக பொருள் புரிந்து படிக்கவும், மாணவர்கள் மட்டுமின்றி சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களும் திருக்குறளை அறியச் செய்யவும் புது முயற்சியை மேற்கொண்டேன்.

இன்று மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் சமூக வலைதளங்களில் தங்களின் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.


 எனவே, திருக்குறளை பரப்ப சமூக வலைதளங்களை எனக்கான தளமாக்கிக்கொண்டேன்.

தினம் ஒரு திருக்குறள் என்ற குறிக்கோளோடு முதலாவது குறள் தொடங்கி 1,330 குறளும் மனதில் எளிதாக பதியும் வகையிலும், அதன் பொருள் புரியும் வகையிலும் விளக்கத் திட்டமிட்டேன்.


இதற்காக தினமும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து ஒரு திறக்குளை தெளிவாக எழுதி அதை செல்போனில் புகைப்படம் எடுப்பேன்.

பின்னர், அதற்கு இசை வடிவத்தை தேர்வு செய்து பதிவிடுவேன்


. அதோடு, அக்குறளுக்கான விளக்கத்தையும், பின்புலத்தில் திருவள்ளுவர் படம் தெரியும் வகையில் செல்போனில் உள்ள 4 செயலிகள் மூலம் செய்து முடிப்பேன். இதற்கு சுமார் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும்.

அதன்பின், அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி சுமார் 5 மணி வரை அனைத்து வாட்ஸ்-ஆப் குரூப்களிலும், முகநூலிலும் பதிவேற்றம் செய்வேன்.


இதற்காக தமிழகம் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழாசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களைக் கொண்ட 173 வாட்ஸ்-அப் குரூப்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 14 லட்சம் பேர் இத்திருக்குறளைப் பார்க்கின்றனர்.

தினம் ஒரு குறள் என்ற வரிசையில் தற்போது நாடு என்ற 74-வது அதிகாரத்தில் அரணியம் என்ற இயலில் 735-வது திருக்குறளை வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து 1,330 குறளையும் இதேபோன்று பதிவேற்றம் செய்வேன்" என்றார்.

No comments:

Post a Comment