IRCTC Ticket Booking:. ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போறீங்களா? : இதை கண்டிப்பா மறந்துறாதீங்க - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

IRCTC Ticket Booking:. ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போறீங்களா? : இதை கண்டிப்பா மறந்துறாதீங்க

IRCTC Ticket Booking Rules, Tatkal Timings: ரயில் பயணம் என்றாலே சுகமானது தான். அந்த சுகமான பயணத்தை நாம் திட்டமிட்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து சென்றால், அந்த பயணம் என்றென்றைக்கும் நமது வாழ்வில் வசந்தகால எண்ணங்களாக நிலைத்திருக்கும்.

IRCTC மூலம் ஓருவர் ஒரு மாதத்திற்கு ஆறு டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்யமுடியும்.IRCTC அக்கவுண்ட் உடன் ஆதார் எண்ணை இணைக்கும்பட்சத்தில் கூடுதலாக 6 டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும். IRCTC மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதென்றால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

.IRCTC மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இருப்பவர்கள், கண்டிப்பாக இந்த பத்து விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்..

1.IRCTC இணையதளம் மூலம் 120 நாட்களுக்கு முன்னரே, நாம் திட்டமிட்ட பயணத்திற்கு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ள முடியும். எனினும் சில குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே ஓடும் ரயில்களில், 60 நாட்களுக்கு முன்னர் தான் டிக்கெட் முன்பதிவு செய்ய இயலும்.

2. IRCTC மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஒரு யூசர் ஐடி உருவாக்கி கொள்ள வேண்டும். இந்த ஐடியின் மூலமே, டிக்கெட் முன்பதிவு, ரத்து, புகார்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

3. IRCTC இணையதளம் மற்றும் செயலியின் மூலம் அதிகாலை 00.45 மணி முதல் இரவு 11.45 மணி வரை ( ஞாயிறு உட்பட எல்லா நாட்களிலும்)டிக்கெட்டை முன்பதிவு செய்ய இயலும்.

4. IRCTC பக்கத்தில் உள்ள payment mode மூலம் மட்டுமே பணத்தை செலுத்தி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய இயலும்.
5. தட்கல் டிக்கெட் முன்பதிவு, ரயில் பயணத்திற்கு முந்தைய தினத்தில் மட்டுமே செய்ய முடியும். உதாரணமாக, ரயில் பயணம் ஆகஸ்ட் 2ம் தேதி என்றால், ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிமுதல் தட்கல் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

6. பொதுப்பிரிவு, மூத்த குடிமக்கள், பெண்கள், தட்கல் கோட்டாக்களில், IRCTC மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும்.

7. ரயில்களில் ஏசி முதல் வகுப்பு தவிர்த்து, மற்ற வகுப்புகளில் பயணிக்க தட்கல் ரயில் டிக்கெட் எடுத்துக்கொள்ள முடியும்.
8. ரயில்களில் படுக்கை வசதி மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி வகுப்புகளில் பயணிக்க பெண்கள், பெண்கள் கோட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

9. நாம் தேர்ந்தெடுக்கும் பிரிவு மாற்றம், இருக்கும் இடத்தை பொறுத்து சீட்கள் மாறியமைவது போன்றவை மாற்றியமைவதற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

10. IRCTC மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களை ரத்து செய்ய வேண்டுமெனில், சார்ட் தயாரிக்கப்படுவதற்கு முன்னரே செய்துவிட வேண்டும். ஒருவேளை சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னர் டிக்கெட்களை ரத்து செய்ய நேர்ந்தால், ஆன்லைன் முறையில், டிக்கெட் டிபாசிட் ரிசிப்ட் (TDR) மூலமாகவே விண்ணப்பித்து பணத்தை திரும்ப பெறமுடியும்

No comments:

Post a Comment