ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 21, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி:

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள்முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளின்படி தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில்மொத்தம் 1,62, 313 ஆசிரியர்கள் தேர்வுஎழுதியுள்ளனர். இந்த தேர்வில் அதிகபட்சமாக 99/ 150 மதிப்பெண்ணும், குறைந்த பட்சமாக 1/150 மதிப்பெண்ணும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
.
இந்நிலையில் முதல் தாளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி தேர்வு எழுதியவர்களில் 2250 பேர் 75 மதிப்பெண்களும், 843 பேர் 80 மதிப்பெண்களும், 72 பேர் 90 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

மேலும் தேர்வு எழுதிய 1,62,313 ஆசிரியர்களில் 1,60,002 ஆசிரியர்கள் தோல்வியடைந்துள்ளனர். அதாவது 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். மீதமுள்ள 98.62%ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.

ஆசிரியர்களில் தகுதி தேர்விற்கான முடிவுகள் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தையும், நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment