10ம் வகுப்பு கணக்கு தேர்வை 2 தாள்களாக நடத்த திட்டம்: சிபிஎஸ்இ முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 11, 2019

10ம் வகுப்பு கணக்கு தேர்வை 2 தாள்களாக நடத்த திட்டம்: சிபிஎஸ்இ முடிவு

சிபிஎஸ்இ என்னும் மத்திய பள்ளிக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2020 மார்ச் மாதம் நடக்க உள்ளது.


 தற்ேபாது அதற்கான தற்காலிக தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி நடக்கிறது.


 இந்நிலையில், 10ம் வகுப்புக்கான கணக்குப் பாடத் தேர்வை ஒரே நாளில் நடத்தாமல், இரண்டு கட்டமாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டு வருகிறது. அதாவது கணக்கு பாடம் தாள் 1, தாள் 2 என நடத்தப்பட உள்ளது.


 கணக்கு தாள் 1ல் அடிப்படை கணக்குகளும், தாள் இரண்டில் தரமான கணக்குகளும் இடம் பெறும். பத்தாம் வகுப்புக்கான கணக்கு பாடத்தில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பிரிவை தெரிவிக்க தேர்வு விண்ணப்பத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கும். அதை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

அடிப்படை கணக்கு பிரிவை தேர்வு செய்பவர்கள் 11ம் வகுப்பில் கணக்கு பாடத்தை எடுத்து படிக்க முடியாது. அதனால் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் அந்த பாடத்தை மட்டுமே எழுத முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.



அதில் அவர்கள் அதிக அளவில் மதிப்பெண் எடுத்துவிட்டால் 11ம் வகுப்பில் கணக்கு பாடத்தை எடுத்து படிக்க முடியும். அதனால் கணக்கு பாடத்திட்டத்தில் எந்த மாற்றத்தையும் சிபிஎஸ்இ கொண்டு வராது.


இந்த இரண்டு கணக்குப் பாடப் பிரிவிலும் கடினமான பகுதிகள் இருக்கும். அதனால் மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தால் தரமான கணக்குப்பாடப் பகுதியை மாணவர்கள் தெரிவு கொள்ளலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.


இது கடிமானது என்று மாணவர்கள் நினைத்தாலோ அல்லது கணக்கு தொடர்பில்லாத கல்வியை தொடரலாம் என்று கருதுவோர் அடிப்படை கணக்கு பிரிவை தெரிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதன்படி, அடிப்படை கணக்குப் படிப்பதை விட , தரமான கணக்குப் பிரிவை படித்தால் நல்லது என்று தெரிகிறது.

No comments:

Post a Comment