இனி ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1000ரூ அபராதம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 7, 2019

இனி ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1000ரூ அபராதம்!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு 1000ரூ அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து விதிகளை கடுமையாக்குவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


பாராளுமன்றத்தில் மோட்டார் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது .அதன் படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு இனிமேல் 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்


. 90% இளைஞர்கள் தலைக்கவசம் அணியாததாலேயே தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ளனர்


உயிர் காக்கும் ஹெல்மெட்டை குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போதும், அருகில் உள்ள கடைகளுக்குச் செல்லும் போதும் அணிய வேண்டிய அவசியமில்லை என்று சிலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 ஆனால் அப்படி அணியாதவர்களிடம் 1000ரூ வசூலிக்கப்படும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment