10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாளில் ஆங்கிலத்துக்கு முதலிடம்: தமிழறிஞர்கள் எதிர்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 7, 2019

10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாளில் ஆங்கிலத்துக்கு முதலிடம்: தமிழறிஞர்கள் எதிர்ப்பு

பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாளில் ஆங்கிலத்துக்கு முதலிடம் கொடுத்து அடுத்து தமிழில் வினா இருப்பதால் தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களில் ஏராளமான பிழைகள் இருந்தன. தேசிய கீதம் தவறாக இருந்தது. ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் பருவ காலம், சூரிய குடும்பம் பற்றி பிழையாக இருந்தது.

பிளஸ் 2 தமிழ் பாடப் புத்தகத்தில் மகாகவி பாரதியின் முண்டாசு காவி நிறத்தில் இருந்தது. ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் தமிழ் கிமு 300 முதலே பயன்பாட்டில் இருந்ததாகவும், சமஸ்கிருதம் கிமு 2000 முதலே பயன்பாட்டில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இவற்றை நீக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பாடத்திட்டம் மாறியதால், 2019-20 பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதில் வினாத்தாளில் உள்ள ஒவ்வொரு வினாவும் ஆங்கிலத்தில் குறிப்பிட்ட பின்பே தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த காலங்களில் தமிழில் குறிப்பிட்ட பின்பே ஆங்கிலத்தில் இருந்தது. தமிழை இரண்டாம்நிலைப் படுத்தியதாக தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கல்வித்துறை மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை தமிழாசிரியர் இளங்கோ கூறுகையில், தமிழ், ஆங்கில வினாத்தாளைத் தவிர்த்து கணிதம், அறிவியல், சமூக அறிவியல் வினாத்தாள்களில் தமிழ் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் முதலில் தமிழில் வினா இருக்கும்.


 அதைத் தொடர்ந்தே ஆங்கிலத்தில் இருக்கும். ஆனால், புதிய வினாத்தாளில் முதலில் ஆங்கிலம் வருகிறது. அதன்பின்பே தமிழ் வருகிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment