ஆயுஷ் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கும் செப்டம்பர் 13ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யோகா மற்றும் இயற்ைக மருத்துவம் நீங்கலாக பிற ஆயுஷ் மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதிக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 25ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், தற்போது நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான இணையதளத்தில் (www.tnhealth.org) செப்டம்பர் 13ம் தேதி பிற்பகல் 3 மணி வரை இணையதளத்தில் விண்ணப்பம், தகவல் பதிவேட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் செப்டம்பர் 13ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இயக்குனர், இந்திய மருத்துவம் ஒமியோபதி துறை, சென்னை என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம், கல்வித்தகுதி மேற்கண்ட இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment