தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,450 பேராசிரியர் பணியிடம் காலி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 4, 2019

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,450 பேராசிரியர் பணியிடம் காலி

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,450 பேராசிரியர் பணியிடங்கள் (75 சதவீதம்) காலியாக உள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில், 46 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.


இக்கல்லூரிகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, இன்ஜினியரிங் படிப்புகள் மீதான மோகம் குறைந்து வருகின்றன.


 அதேவேளையில், வேலைவாய்ப்பு உத்திரவாதம் காரணமாக, டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அரசு பாலிக்டெக்னிக்குகளில் போதுமான எண்ணிக்கையில், பேராசிரியர்கள் பணியில் இல்லை.


மாநிலம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தம் 2,014 பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில், 564 பேர் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனர். மீதமுள்ள 1,450 பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் இல்லை. மாறாக, கவுரவ விரிவுரையாளர்களை வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது


.இதேபோல், அனைத்து கல்லூரிகளிலும் சேர்த்து 200க்கும் மேற்பட்ட துறைத்தலைவர் பணியிடங்களும், 15க்கும் அதிகமான முதல்வர் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால், பல்வேறு சிக்கல்களுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:


தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில், 75 சதவீத பேராசியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. ஒவ்வொரு துறையிலும் குறைந்தது 6 பேர் இருக்க வேண்டிய நிலையில்,பல கல்லூரிகளில் இருவர் கூட இல்லை. புதிய நியமனத்திற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தேர்வுகள் நடத்தப்பட்டது.


ஆனால்,தேர்வு முடிவில் நடந்த முறைகேடு,அதற்கு பின்னர் தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றால்,நியமனம் மேற்கொள்ளப்படாமலேயே உள்ளதுபாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் பணியை பொறுத்தவரை, பொறியியல் சார்ந்த பிரிவுகளுக்கு பிஇ பட்டமும்,பிற பிரிவுகளுக்கு முதுகலை பட்டமும் பெற்றிருந்தால் போதுமானது.


அத்தகைய தகுதியை பெற்றுள்ள லட்சக்கணக்கானோர்,மாநிலம் முழுவதும் காத்திருக்கும் நிலையில்,75 சதவீத காலிப்பணியிடம் இருப்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது.


அதேசமயம்,95 சதவீத துறைத்தலைவர் பணியிடமும், 30 சதவீத கல்லூரிகளில் முதல்வர் பணியிடமும், கல்லூரி அலுவலகங்களில் 60 சதவீத அமைச்சு பணியிடங்களும் காலியாக உள்ளதால்,நிர்வாகத்திலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.


 எனவே,காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன்,குறைபாடுகளை களைந்து தகுந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment