ஆக. 15 முதல் குடிநீர் பாட்டில்களுக்கு தடை: தண்ணீர் ATM ரெடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 2, 2019

ஆக. 15 முதல் குடிநீர் பாட்டில்களுக்கு தடை: தண்ணீர் ATM ரெடி

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குடிநீர் ஏடிஎம்கள்., அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.


நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் 17 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் 14 பொருட்களுக்கு பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக சில வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சிகளில் ஒன்றாக, சென்னை உயர்நீதி மன்றமும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


இந்த உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


 முதற்கட்டமாக, இந்த தடை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைப் பகுதிகளில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்டத்தில் தற்போது 70 இடங்களில் குடிநீர் ஏடிஎம்., மையங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.


 மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையொட்டி உள்ள பகுதிகளில் இந்த குடிநீர் ஏடிஎம்.,கள் அமைக்கப்பட்டு வருகின்றன.


இந்த குடிநீர் ஏடிஎம்., மையங்களில் உள்ள இயந்திரத்தில் ரூ.5 காயின் செலுத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற முடியும்.


இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு வெகுவாகக் குறையும் என்பதால் பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்

No comments:

Post a Comment