கல்விக்கு இணையதளம்: 15 லட்சம் பள்ளிகள் ஒருங்கிணைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 28, 2019

கல்விக்கு இணையதளம்: 15 லட்சம் பள்ளிகள் ஒருங்கிணைப்பு

மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பாக நாட்டில் உள்ள 15 லட்சம் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய இணையதளம் ‘ஷாகன்’ தொடங்கப்பட்டுள்ளது.


பள்ளி கல்விக்கான இணையதளம் ஷாகனை மத்திய  அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.


 தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ் கூறுகையில், “இந்த இணையதளம் மூலமாக 2.3 லட்சத்துக்கும் அதிகமான கல்வி வெப்சைட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளது”  என்றார்.

இதுகுறித்து மனித வள மேம்பாட்டு துறை அதிகாரி கூறுகையில், “1200 கேந்திர வித்யாலயாக்கள், 600 நவோதயா வித்யாலயா, 18,000 சிபிஎஸ்இ பள்ளிகள், 30 மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில், 19,000 தேசிய ஆசிரியர்  கல்வி கவுன்சில் அமைப்புகள் உள்ளிட்டவை வழங்கும் தகவல்கள் அனைத்தும் மூன்றாம் நபர் மூலம் சரிபார்க்கப்படும்.

 நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பள்ளிகளின் தரவரிசையை இணையத்தில் பார்க்கலாம். சாதாரண மக்கள் கூட  கருத்துக்களை இந்த இணையத்தில் பதியலாம்” என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment