வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம்: ரூ.1 கட்டணத்தில் இ-சேவை மையத்தில் திருத்தலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 31, 2019

வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம்: ரூ.1 கட்டணத்தில் இ-சேவை மையத்தில் திருத்தலாம்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின்படி, பட்டியலில் உள்ள விவரங்களை இணைய சேவை மையத்துக்குச் சென்று திருத்தலாம் என்று தேர்தல் ஆணையத்தின் தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


இந்தத் திட்டத்தின்படி தேசிய வாக்காளர் சேவை இணையதளம், 1950 என்ற உதவி எண், செல்லிடப்பேசி செயலி, பொது சேவை மையங்கள் ஆகியவற்றின் வழியாக, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்தலாம். இதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் துறை செய்துள்ளது.


எவ்வளவு கட்டணம்:

தேர்தல் துறை செய்துள்ள ஏற்பாடுகளில் பொது சேவை மையங்கள் தவிர, பிற அம்சங்களை நாமே தனிப்பட்ட முறையில் வாக்காளர் பட்டியல் விவரங்களைத் திருத்தலாம்பொது சேவை மையங்களைப் பொருத்தவரையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 450-க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் ஏற்கெனவே தேர்தல் துறை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டையை அச்சிட்டுத் தருவது, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்துவதற்கான விண்ணப்பம் மற்றும் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் ஆகியவற்றை பூர்த்தி செய்து இணைய சேவை மையத்தின் வழியாக அனுப்பலாம்.


இந்த நிலையில், வாக்காளர் சரிபார்ப்புத் திட்டத்தை தேர்தல் துறை வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 1) முதல் ஒரு மாத காலம் மேற்கொள்ளவுள்ளது.


 இந்தத் திட்டத்தின்படி, பொது சேவை மையங்களுக்குச் சென்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை வாக்காளர்களே திருத்தலாம்.
அதேசமயம் இதற்காக வரையறுக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


பொது சேவை மையத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒரு திருத்தத்துக்கு ரூ.1 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரியாக 18 பைசா சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 ஆனால், பொது சேவை மையத்தின் மூலமாக இதுவரை அதிகாரப்பூர்வமான கட்டண விவரம் தெரிவிக்கப்படவில்லை. வரும் திங்கள்கிழமைக்குப் பிறகு, கட்டணம் குறித்து பொது சேவை மையம் தெரிவிக்கும் என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment