தொகுப்பூதிய அடிப்படையில் 2,120 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 9, 2019

தொகுப்பூதிய அடிப்படையில் 2,120 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு

தமிழக அரசு கல்வியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில், தொகுப்பூதிய அடிப்படையில் 2,120 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


  தமிழக உயர்கல்வித்துறையின்கீழ், 90 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 50 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது.


இதேபோல், 2,200க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடம் நிரப்பப்படாமலே உள்ளன. இதனால், கல்லூரி நிர்வாகப்பணிகளும், மாணவர்களின் கல்வி செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது


. இதனை நிரப்ப கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, நிரந்த உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்திக்கொள்ள அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

இவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2018-2019ம் கல்வியாண்டிற்கு, ஆகஸ்ட் மாதத்தில் 1,883 கவுரவ விரிவுரையாளர்களையும், கடந்த ஜனவரி மாதத்தில் கூடுதலாக 540 பேரையும் நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.


இதனிடையே, நடப்பு 2019-2020ம் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே 2,653 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளதால், கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக்கொள்ள கல்லூரி கல்வி இயக்குநர் சார்பில், அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,120 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 11 மாதங்களுக்கான தொகுப்பூதியமாக, 34.98 கோடி நிதியை ஒதுக்கி அரசு முதன்மை செயலர் மங்கத் ராம் சர்மா அரசாணை வெளியிட்டுள்ளார்.


 அதன்படி, அரசு ஆண்கள் கலைக்கல்லூரிகளில் 1,416 கவுரவ விரிவுரையாளர்களையும், பெண்கள் கலைக்கல்லூரியில் 666 பேரையும், ஆண்கள் கல்வியியல் கல்லூரிகளில் 25 பேரையும், பெண்கள் கல்லூரியில் 13 பேரையும் நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி மற்றும் உரிய விதிகளின் அடிப்படையில், இந்த கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்துமாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment