அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி செப்.23 முதல் விழிப்புணர்வு பிரசாரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 21, 2019

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி செப்.23 முதல் விழிப்புணர்வு பிரசாரம்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி செப்.23 முதல் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம்,'' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் மயில் தெரிவித்தார்.தேனியில் அவர் கூறியதாவது:


மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என கூறி, '46 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு நுாலகமாக மாற்றுகிறோம்' என்கின்றனர். 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 1,850 பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்தால் தமிழ் வழிக்கல்வி, இலவச கல்வி கற்கமுடியாது.


 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றுவதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும். ஒரு ஆசிரியர் வாரத்தில் ஒன்று முதல் 5 வகுப்புகளுக்கு 23 பாடங்களை நடத்த வேண்டியுள்ளது.


 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் அவசியத்தையும், அரசின் 16 வகையான நலத்திட்ட உதவிகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.


மேலும் தேசிய கல்வி கொள்கையால் ஏற்படும் பாதிப்பு பற்றியும், திரும்ப பெற வலியுறுத்தியும் செப். 23 முதல் பிரசாரம் செய்ய உள்ளோம். சென்னை, வேலுார், தஞ்சை, திருச்சி, கரூர், தேனி மாவட்டங்களில் துவங்கி கரூரில் நிறைவு செய்வோம், என்றார்------

No comments:

Post a Comment