ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை: 26 முதல் நேர்முகத் தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 21, 2019

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை: 26 முதல் நேர்முகத் தேர்வு



ஏர் இந்தியா பொறியியல் சேவை லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 393 டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Aircraft Technician (Maint/Aircraft Overhaul, Engine) - 138
பணி: Aircraft Technician Avionics, Electrical, Instrument, Radio) - 102
தகுதி: Aircraft maintenance Engineering பிரிவில் டிப்ளமோ அல்லது மெக்கானிக்கல், ஏரோநட்டிக்கல் பிரிவில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூகேஷன், ரேடியோ, இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்து ஒன்று மற்றும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Skilled Trades Men - Fitter, Sheet Metal Trade - 47
பணி: Skilled Trades Men Painter Trade - 28
பணி: Skilled Trades Men Upholstery, Sewing Technology Trade - 31
பணி: Skilled Trades Men, X-Ray, NDT Trade - 09
தகுதி: இயற்பியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Skilled Trades Men, Electroplating Trade - 02
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Skilled Trades Men, Welder Trade - 04
பணி: Skilled Trades Men, Machincal Trade - 06
பணி: Skilled Trades Men, Fiberglass, Carpenter - 07
பணி: Draughtsman - 05
பணி: Skilled Trades - Plant Electrical - 02
பணி: Skilled Trades - Plant Mechanical - 12


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி பொது பிரிவினர் 35 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 38 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தொழில்திறன், டிரேடு தேர்வு மற்றும் டெக்னிக்கல் அஸஸ்மெண்ட் தேர்வு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Engineering Services Limited, Personnel Department, Avionics Complex, First Floor, IGI Airport(Near New Custom House), New Delhi - 110 037

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை Air India Engineering Services Limites என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aisel.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் சுயசான்று செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி: 26.08.2019 முதல் 24.09.2019 வரை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment