சிவகங்கை : மாவட்டத்தில் கல்வித்துறை முடிவுபடி அரசு உயர், மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள 27 தொடக்க, நடுநிலை பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன
.மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்துார் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களின் கீழ் ஆயிரத்து 116 தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன.
இதில், அரசு உயர், மேல்நிலை பள்ளி வளாகத்திற்குள்ளேயே தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் செயல்படுகிறது.
இப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர அரசு முடிவு செய்தது.அந்த வகையில் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டன.
அதன்படி சிவகங்கை - 10, தேவகோட்டை - 12, திருப்புத்துார் - 5 என மூன்று கல்வி மாவட்டத்திலும் 27 தொடக்க, நடுநிலை பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்பட உள்ளன. இனி தொடக்க பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டிற்குள் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment