தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கூடத்தில் 30 புதிய படிப்புகள் அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 9, 2019

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கூடத்தில் 30 புதிய படிப்புகள் அறிமுகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கூடத்தில் 30 புதிய படிப்புகள் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 9 முதுநிலை பட்டயப் படிப்புகளும், 18 சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.


இப்படிப்புகளை விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் படித்து பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், 2019-20-ம் கல்வியாண்டில் புதிதாக 30 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிஜி டிப்ளமோ எனப்படும் முதுநிலை பட்டயப் படிப்பில் மூலிகைப் பயிர்கள் உற்பத்தி, தரக்கட்டுப்பாடு மற்றும் சந்தைப் படுத்துதல், தேயிலைத் தோட்ட மேலாண்மை, கிராமப்புற வங்கி மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மேலாண்மை, கரும்பு தொழில் நுட்பங்கள், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், வணிக ரீதியில் உயிரியல் பூச்சி மற்றும் நோய்க்கொல்லிகள் உற்பத்தி, அங்கக வேளாண்மை, பசுமைக் குடில் சாகுபடி ஆகிய 9 படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.டிப்ளமோ எனப்படும் பட்டயப் படிப்பில் வேளாண் இடுபொருள் படிப்பு தொடங்கப்பட உள்ளது.

இதேபோல சான்றிதழ் படிப்பில் வேளாண்மை சார்ந்த சான்றிதழ் படிப்பில் இயற்கை பண்ணையம், பட்டுப் புழுவியல், நவீன பாசன மேலாண்மை, தேனீ வளர்ப்பு, கரும்பு உற்பத்தி தொழில்நுட்பம், காளான் சாகுபடி, பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, தென்னை உற்பத்தி தொழில்நுட்பம், மருத்துவ தாவரங்கள், வேளாண் உபகரணங்கள், கருவிகள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு, தோட்டக்கலை பயிர்களில் பண்ணை தொழில்நுட்பம், பழங்கள் மற்றும் காய்கறி பயிர் பாதுகாப்பு, காய்கறி விதை உற்பத்தி, பருத்தி உற்பத்தி தொழில்நுட்பம், வீரியரக பருத்தி, சோள விதை உற்பத்தி, மலர் சாகுபடி, களை மேலாண்மை, சிறு தானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டிய பொருட்கள், வேதிப்பொருட்கள் மற்றும் நச்சு மேலாண்மை, தேயிலை உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட 22 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் எம்.ஆனந்தன், 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:

திறந்தவெளி மற்றும் தொலை தூரக் கல்வி இயக்ககத்தில் நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பட்டயப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பில் 30 புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. முதுநிலை பட்டயப் படிப்பில் சேர பட்டப் படிப்பு முடித்தவர்கள் சேரலாம். வேளாண்மை சார்ந்த துறைகளில் பணியாற்று பவர்களுக்கு இப்படிப்பு பயனுள்ளதாக இருக்கும்


. இது ஓராண்டு படிப்பாகும். ஆண்டுக்கு இருமுறை செமஸ்டர் தேர்வு நடத்தப்படும். தலா ரூ.13 ஆயிரம் கட்டணம். வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பானது, வேளாண் இடுபொருள் விற்பனை யாளர் களுக்கானது.

எஸ்எஸ்எல்சி முடித் தவர்கள் இப்படிப்பில் சேரலாம். ஓராண்டு படிப்பாகும். ரூ.25,000 கட்டணம் செலுத்தி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும்.

சான்றிதழ் படிப்பானது விவசாயிகள், விவசாயம் சார்ந்த துறையினரின் தேவைக்கேற்ப ஆரம்பிக்கப்பட்டது. இது 6 மாதகால படிப்பாகும். ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி சேரலாம். எழுத, படிக்க தெரிந்தவர்கள் சேரலாம். இது குறித்த விவரங்களை www.tnau.ac.in, odl@tnau.ac.in என்ற இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment