கல்வி, 'டிவி'யின் ஒளிபரப்பு இன்று துவங்க உள்ளதால், பிற்பகல், 3:00 மணி முதல், ஒரு மணி நேரம், வகுப்புகளை ரத்து செய்து விட்டு, மாணவர்களுக்கு, 'டிவி'யில் படம் காட்டுமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி துறைதமிழக பள்ளி கல்வி துறை சார்பில், கல்வி துறை தொடர்பான நிகழ்ச்சிகளை, அனைத்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், 'டிவி' தொடங்கப்படுகிறது.
சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின் எட்டாவது மாடியில், இதற்கான அலுவலகமும், படப்பிடிப்பு தளமும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த, 'டிவி'யின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு, இன்று துவங்குகிறது.
சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்., 'டிவி' ஒளிபரப்பை, இன்று துவங்கி வைக்கிறார். பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் விழாவில் பங்கேற்கிறார்.
கல்வி, 'டிவி' துவக்கம் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:கல்வி, 'டிவி' ஒளிபரப்பு இன்று துவங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், கல்வி, 'டிவி'யில், இன்று பிற்பகல், 3:00 மணி முதல், 4:00 மணி வரை, ஒளிபரப்பு செய்யப்படும்
இந்த நேரத்தில், அனைத்து பள்ளிகளின் மாணவர்களும், இந்த நிகழ்ச்சியை பார்க்க செய்ய வேண்டும்.யூ - டியூப்பள்ளிகளில் உள்ள, 'டிவி'க்களிலும், 'டிவி' இல்லாத பள்ளிகளில், எல்.சி.டி., புராஜக்டர் வழியாக, யூ - டியூப்பை பயன்படுத்தி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால், இன்று பிற்பகல், 3:00 மணி முதல், 4:00 மணி வரையிலும், பாட வகுப்புகளுக்கு பதில், 'டிவி'யில் படம் காட்டப்பட உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment