3000க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 11, 2019

3000க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் p.k இளமாறன்


தமிழ்நாட்டில் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லையென்று 46 பள்ளிகளை மூடிட தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.


 அரசுபள்ளிகளை மேம்படுத்திட வேண்டும் என்பதற்காக  புதியதாக தொடங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


 அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசே முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெற்று மாணவர்களை சேர்த்துவிடுவது மட்டுமின்றி ₹100 கோடிக்கும் மேலாக கட்டணமும் வழங்கி வருவது வேதனையளிக்கிறது.


 இப்படிப்பட்ட அரசின் முடிவு சரிதானா என்று யோசித்து பார்க்கவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. அரசு பள்ளிகளை திறம்பட இயங்க வைக்க எந்த நடவடிக்ைகயையும் எடுக்காத அரசு அதை மூடிவிட்டு, மாணவர்களையும் அரசு பள்ளிகளில் சேர்வதற்கு ஊக்கமளிக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்? அரசின் இந்த செயல்பாடு மிகவும் ஆபத்தானது எதிர்காலத்தில் கல்வி என்பது வியாபாரப்பொருளாகி, தனியார் வசம் பெரும் பணம் கொட்டும் நிலைக்கு தள்ளப்படும்;


அரசு தொடர்ந்து இப்படி ஊக்குவிப்பதால், ஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.


 இப்படிப்பட்ட மாணவர்களை  தாரைவார்த்துவிட்டு அரசு பள்ளிகளில் மாணவர்களில்லை;


 அதனால் பள்ளிகளை மூடிவிட்டு நூலகங்களாக மாற்றுகிறோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.

இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகள் அனாதையாகிவிடுவதோடு மூடப்படும் அபாயம் ஏற்படும்.


ஆகையால் தமிழக அரசு அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டுவிட்டு போதிய வசதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3000க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது, அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாக கூறி மூட நினைக்கும் தமிழக அரசு வருங்காலங்களிலாவது அந்த பள்ளிகளின் தரத்தை உயர்த்தி கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3000க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment