காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் ஒட்டியதால் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 30 பேருக்கு பல்கலை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
இங்கு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1700 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.சமீபத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மத்திய பல்கலையில் உள்ள அறிவிப்பு பலகையில், மாணவர்கள் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் ஒட்டியதாக கூறப்படுகிறது.
பல்கலை வளாகத்தில் துண்டுபிரசுரம் ஒட்டியது தொடர்பாகவும், தடையை மீறி ஒன்று கூடி பேசியதாகவும் 5 மாணவிகள் உள்பட 30பேருக்கு விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் புவனேஸ்வரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment