திண்டுக்கல்லில் உள்ள ஆயிரத்து 316 அரசு பள்ளிகளுக்கு பயோ- மெட்ரிக் வருகை பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய 'பயோ-மெட்ரிக்' வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசு பள்ளிகளுக்கு பயோ-மெட்ரிக் கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் தங்கள் வருகையை பயோ-மெட்ரிக் கருவியில் கட்டாயம் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்டமாக திண்டுக்கல்லில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பயோ-மெட்ரிக் கருவி வழங்கப்பட்டதுதற்போது இரண்டாம் கட்டமாக தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு வழங்கியதன் மூலம் இதுவரை 1,316 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பயோ-மெட்ரிக்கில் பதிவானால் மட்டுமே வருகை உறுதி செய்யப்படும். முதன்மை கல்வி அலுவலர் அவரது அலுவலகத்தில் இருந்தவாறே ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை பதிவேட்டை கணினி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

No comments:
Post a Comment