நீங்கள் உங்கள் பெற்றோருக்கு ஒரே மகளா? பிஜி படித்தால் 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 4, 2019

நீங்கள் உங்கள் பெற்றோருக்கு ஒரே மகளா? பிஜி படித்தால் 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்!

பெற்றோருக்கு ஒரே மகளாக பிறந்து, முதுநிலை படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 36200 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப் திட்டம்:

பெற்றோருக்கு ஒரே ஒரு பெண் குழந்தையாக பிறந்து, பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்காக ஆண்டுதோறும் இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தை பல்கலைக்கழக மானியக்குழு எனப்படும் யுஜிசி செயல்படுத்தி வருகிறது.


சிறு குடும்பத்தின் அவசியம் மற்றும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இப்படி ஒரு திட்டத்தை யுஜிசி கடந்த பல ஆண்டுகளாக அமல்படுத்தி வருகிறது.


நடப்புக் கல்வி ஆண்டில், பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் முதலாமாண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள், இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்


.இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோருக்கு ஒரே ஒரு முக்கிய நிபந்தனை இருக்கு. நாம் முன்பே குறிப்பிட்டதுபோல பெற்றோருக்கு ஒரே மகளாக பிறந்திருக்க வேண்டும்.


சகோதரர், சகோதரி பிறந்திருக்கக் கூடாது. அதேநேரம், இரட்டை பெண் குழந்தைகளாக (ட்வின்ஸ்) பிறந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியானவர்கள். 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் மொத்தம் 3000 மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.


இளநிலை பட்டப்படிப்பில் எடுத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்படுவர். எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆண்டுக்கு 36200 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். தொலைநிலை முறையில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.

இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் மாணவிகள், பயன்பெறும் காலத்தில் வேறு சில திட்டங்களின் கீழும் உதவித்தொகை பெறுவதற்கு எந்த தடையும் கிடையாது.


இரண்டாம் ஆண்டுக்கு உதவித்தொகை பெற, மறக்காமல் பதிவை புதுப்பிக்க வேண்டும். மேலும், பெற்றோருக்கு தான் ஒரே மகள்தான் என்பதற்கான 50 ரூபாய் முத்திரைத்தாள் ஒட்டப்பட்ட பிரமாணப்பத்திரமும் (அஃபிடவிட்) ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வது கட்டாயம்.

பிரமாண பத்திரத்தின் மாதிரி, அனெக்ஸர்&2ல் இணைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் குறித்து நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2019

மேலும் விவரங்களுக்கு: https://scholarships.gov.in

No comments:

Post a Comment