இந்தியாவிலேயே இந்த திட்டத்தில் தமிழகம் முதலிடம்: பரிசுத்தொகை ரூ 3 கோடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 21, 2019

இந்தியாவிலேயே இந்த திட்டத்தில் தமிழகம் முதலிடம்: பரிசுத்தொகை ரூ 3 கோடி

ஊட்டச்சத்திற்கான மத்திய அரசின் திட்டமான போஷன் அபியான் திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது

மத்திய அரசு போஷன் அபியான் என்ற திட்டத்தை நாடெங்கிலும் கொண்டுவந்தது. இந்த திட்டமானது குழந்தைகள், பெண்கள் ஆகியவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கக் கொண்டு வந்தது.


 இந்த திட்டத்தினால் மக்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க மாநில அரசுகளும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலமாகத் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.


இதுதொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலமாகத் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது


. அதேபோல் சிறப்பான பயிற்சி வழங்கிய பிரிவிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.


அதே போல் ஒன்றிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகளில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபோஷன் அபியான் திட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டிற்குப் பரிசுத் தொகையாக 3 கோடி ரூபாய் அளிக்கப்படவுள்ளது.

இதை டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment