ஒரே கிரனைட் கல்... 3டி பீடம்! கருணாநிதி சிலையின் சிறப்பம்சங்கள்!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 7, 2019

ஒரே கிரனைட் கல்... 3டி பீடம்! கருணாநிதி சிலையின் சிறப்பம்சங்கள்!!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. முரசொலி அலுவலகத்தில் நிறுவி உள்ள கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்

விழாவில் கி.வீரமணி, நாராயணசாமி, வைரமுத்து, திமுக நிர்வாகிகள், தோழமை கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிலையின் மேல்பகுதி தொடங்கி பீடம் வரை 30 டன் எடை கொண்டிருக்கிறது.

அதில் 16 டன் எடையும் 6 அடி உயரமும் கொண்ட ஒரே கறுப்பு கிரனைட் கல்லால் முப்பரிமாண தோற்றத்தில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 "விஸ்கான் ஒயிட்'' என்ற கிரனைட் கற்களை கொண்டு அலங்கார வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதன் நீளம் 10 அடி - அகலம் 10 - உயரம் 9 அடி என்ற அளவில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 இதற்கான கல் மைசூர் அருகேயுள்ள சாம்ராஜ் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை திருவண்ணாமலையில் உள்ள அருணை கிரனைட் கம்பெனி வடிவமைத்துள்ளது.


அமர்ந்த நிலையில் உள்ள கலைஞரின் சிலை, 6.3 அடி அகலமும் 6.5 அடி உயரமும் கொண்டது. இது வெண்கல சிலையாகும்.

No comments:

Post a Comment