குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு சென்னையில் வருகிற 21ம் தேதி ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் அண்ணா மேலாண்மை நிலையம் கட்டுப்பாட்டில் இயங்கும் போட்டி தேர்வுகள் பயிற்சி மையத்தின் மூலம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வருகிற 21ம் தேதி குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க பயிற்சி முகாம் காலை 10.30 முதல் மாலை 5.30 மணிவரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 01.09.2019 அன்று நடத்த உள்ள குரூப் 4 தேர்விற்கான தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் இதன்மூலம் பயனடையலாம். இந்த முகாமை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைக்கிறார்.
இந்த முகாமில் தேர்வர்கள் பங்குபெறுவதை உறுதி செய்ய www.annainstitute.org என்ற இணைய தளத்தில் இன்று முதல் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். முகாம் நடைபெறும் அன்றும் காலை 9 மணி முதல் நேரடி பதிவும் செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முதலில் பதிவு செய்யும் 1000 பேருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரு கையேடு, குறிப்பு நோட்டு, மதிய உணவு, தேனீர் அனைத்தும் துறை சார்பில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment