குரூப் 4 பணிக்கு இலவச மாதிரி தேர்வு : தமிழகத்தில் 25 நகரங்களில் நடக்கிறது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 1, 2019

குரூப் 4 பணிக்கு இலவச மாதிரி தேர்வு : தமிழகத்தில் 25 நகரங்களில் நடக்கிறது

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக குரூப் 4 பணிகளுக்கு இலவச மாதிரி தேர்வு தமிழகத்தில் 25 நகரங்களில் நடக்கிறது.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3), வரி தண்டலர்(கிரேடு1), வரைவாளர் மற்றும் நில அளவர் என மொத்தம் 6491 காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப் 4) தேர்வை வருகிற செப்டம்பர் 1ம் தேதி நடக்கிறது


. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளம் நிலை, முதுநிலை பட்டதாரிகள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.


 சுமார் 14 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை சங்கர் ஐஏஎஸ் அகடாமி வருகிற 25ம் தேதி நடத்துகிறது.


இது தொடர்பாக சங்கர் ஐஏஎஸ் அகடாமி வெளியிட்ட அறிவிப்பில், “ குரூப் 4 போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்காக சென்னை அண்ணாநகர், சென்னை அடையாறு, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, ஊட்டி, திருப்பூர், பழனி, விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் என தமிழகத்தில் 25 நகரங்களில் வருகிற 25ம் தேதி குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வு இலவசமாக நடைபெற உள்ளது


. இத்தேர்வை எழுத விரும்புவோர் www.shankariasacademy.com மற்றும் www.tnpscthervupettagam.com  என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 76667766266, 044-43533445, 45543082 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment