மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆசிரியர் பயிற்சிக்கான "உலகின் மிகப்பெரிய திட்டம்" தொடங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
.டெல்லியில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, ஆசிரியர் பயிற்சிக்கான "உலகின் மிகப்பெரிய திட்டம்" தொடங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், “இந்தியா தரமான கல்வி மற்றும் ஆசிரியர்களை உருவாக்குவதில் முதன்மை வாய்ந்த பாரம்பரியம் கொண்ட நாடாக அறியப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்திய ஆசிரியர்கள் விஸ்வா குருவாக கருதப்பட்டனர். பண்டைய இந்திய கல்வி முறையின் சாதனைகள் புகழ்பெற்றவை.
பள்ளிகள் எந்தவொரு முற்போக்கான தேசத்திற்கும் அடித்தளமாக விளங்குகின்றன. ஆசிரியர்கள் சமுதாயத்தின் அதிகார மையமாகவும் மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்க கூடியவர்களாகவும் விளங்குகின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் முழுமையான முன்னேற்றத்திற்கான தேசிய முயற்சி என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலமாக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 42 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இது ஆசிரியர் பயிற்சிக்கான உலகின் மிகப்பெரிய திட்டமாகும்” என்று அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment