அத்திவரதரை 48 நாட்களும் தரிசனம் செய்த பெண்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 21, 2019

அத்திவரதரை 48 நாட்களும் தரிசனம் செய்த பெண்!

அத்திவரதரை தரிசிக்க பெரும் கூட்டமே கூடிய நிலையிலும் அவற்றை பொருட்படுத்தாது பெரிய காஞ்சிபுரம் லிங்கப்பன் தெருவை சேர்ந்த வசந்தி ராமநாதன் அத்திவரதரை தொடர்ந்து 48 நாட்களும் தரிசனம் செய்துள்ளார்.

58 வயதாகும் வசந்தி, காஞ்சிபுரத்தில் வசித்துவருகிறார். அவரது கணவர் ராமநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரது மகன் சென்னையிலுள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்


.இந்நிலையில் வசந்தி அத்திவரதர் வைபவம் நடைபெற்ற 48 நாட்களும் கோவிலுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார்இதுகுறித்து வசந்தி கூறுகையில், அத்திவரதரை தரிசிக்க முதல் நாளிலே ஆர்வத்துடன் சென்றேன்.


 சயன கோலத்திலிருந்த அத்திவரதரை பார்த்ததும் தினமும் வந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் தினமும் சென்றேன். ஆறாவது நாள் கோவிலுக்கு செல்லும் வழியில் என் கைப்பை தொலைந்தது.

அதிலிருந்த பணம், போன், வீட்டு சாவி என அனைத்தையும் இழந்தேன். எனினும் சாமியை தரிசித்துவிட்டு வீடு திரும்பினேன். முதல்நாள் அரை மணி நேரத்திலும் அதற்கு அடுத்தடுத்த நாள் முதியவர் சிறப்பு வழியிலும் சென்று தொடர்ந்து 48 நாட்கள் அத்திவரதரை தரிசனம் செய்தேன்.

No comments:

Post a Comment