குரூப் 4 தேர்வுக்கு 10 நாள்களே உள்ள நிலையில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஓரிரு நாள்களில் தயாராகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராம நிர்வாக அலுவலருடன் இணைந்த குரூப் 4 தொகுதிக்கான காலிப் பணியிடங்களுக்கு, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதவுள்ளனர்.
தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. தேர்வுக்கு இன்னும் 10 நாள்களே அவகாசம் உள்ள நிலையில், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டானது ஓரிரு நாள்களில் தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்யவும் டி.என்.பி.எஸ்.சி.தயாராகி வருகிறது. மின்னஞ்சல் அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் வழியாகப் புகாரைப் பதிவு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது

No comments:
Post a Comment