பிஎஸ்என்எல் 4ஜி சிம்கள் இன்று முதல் இலவச விநியோகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 27, 2019

பிஎஸ்என்எல் 4ஜி சிம்கள் இன்று முதல் இலவச விநியோகம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் பிஎஸ்என்எல் 4 ஜி சிம்கார்டுகள் செவ்வாய்க்கிழமை (ஆக.27) முதல் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, நாகர்கோவில் பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் சஜூகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பி.எஸ்.என்.எல். அதிவேக 4 ஜி சேவைகள் நாகர்கோவில் நகர் பகுதியில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது நாகர்கோவில் நகருக்கு 51 எல்.டி.இ. தொழில்நுட்பத்தில் இயங்கும் 4 ஜி சேவை செல்லிடப்பேசி கோபுரங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மார்த்தாண்டம், குழித்துறை , தக்கலை, குலசேகரம், குளச்சல், கருங்கல், களியக்காவிளை மற்றும் கொல்லங்கோடு பகுதிகளில் வசிக்கும் பி.எஸ்.என்.எல்.வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வேண்டுகோளின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தின் இந்தப் பகுதிகளிலும் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளுக்கு 4ஜி சேவையை வழங்குவதற்காக 127 செல்லிடப்பேசி கோபுரங்களில் மேம்படுத்தும் பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன.

ஏற்கெனவே 3ஜி சிம் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவை தொடங்கியவுடன் டேட்டா சேவைகளை பெற வேண்டுமெனில் தற்போதைய 3ஜி சிம் ஐ உடனடியாக 4 ஜி க்கு மாற்றுவது கட்டாயம்.

ஏற்கெனவே தங்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் பிஎஸ்என்எல் மொபைல் டேட்டா பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் பிஎஸ்என்எல் சார்பாக, மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், தக்கலை, நெய்யூர், குளச்சல், கருங்கல் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், மேற்கு மாவட்டத்தில் பிற பகுதிகளில் உள்ள தொலைபேசி நிலையங்களிலும், இலவசமாக 4 ஜி சிம் கார்டுகள் ஆக.27 ஆம் தேதி முதல் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் இலவசமாக 4 ஜி சிம் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment