பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி வீதம் அதிகம் காட்டிய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உள்ளதால் தேர்ச்சி சதவீதம் உயர்ந்த பள்ளிகளின் பட்டியலை ஆதிதிராவிடர் நலத்துறை கேட்டுள்ளது
. தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தேர்ச்சி வீதம் குறையும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் அதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டு வருகிறது.
இதையடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் முடிந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி வீதம் அதிகம் காட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஊக்க ஊதியம் அளிக்கப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் 59 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக 5ம் தேதிக்குள் பட்டியல் அனுப்ப வேண்டும் என்று கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 2018-19ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்ச்சி வீதம் பற்றிய விவரங்கள் அனுப்பப்படாததால் 59 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது.
விரைவில் இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்ச்சி வீதம் குறித்த பட்டியல்களை 5ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அப்படி அனுப்பாமல் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment