5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 27, 2019

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பல ஆண்டுளாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



குறிப்பாக புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்வது, தொகுப்பு ஊதியத்தை மாற்றி கால முறை ஊதியம் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகள் இந்த போராட்டம் ந டந்தது. ஆனாலும் அரசுத் தரப்பில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை.


மேலும் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பு குழுகூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்றனர்.


அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்ய வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப் பிரச்னையை களைய வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டக்காரர்கள் மீது தொடரப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவுகளையும், 17 பி நடவடிக்கைகளையும் திரும்ப பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்ததை திரும்ப பெற வேண்டும்.


அரசாணைகள் 145, 101 மற்றும் 102 ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 31ம் தேதி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்துவது. செப்டம்பர் 6ம் தேதி வட்டாரத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

செப்டம்பர் 13ம் தேதி கல்வி மாவட்ட தலை நகரில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது. 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணா விரதம் இருப்பது போன்ற தொடர் போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ நடத்த உள்ளது.

No comments:

Post a Comment