விரைவில் வருகிறது 'பாயின்ட் சிஸ்டம்' முறை: வாகன ஓட்டிகள் 5 முறைக்கு மேல் விதிமீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 30, 2019

விரைவில் வருகிறது 'பாயின்ட் சிஸ்டம்' முறை: வாகன ஓட்டிகள் 5 முறைக்கு மேல் விதிமீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தவும், குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் சென்னை போக்குவரத்து போலீஸார் 'பாயின்ட் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை விரைவில் கொண்டு வர உள்ளனர். அதன் படி, 5 முறைக்கு மேல் விதிமீற லில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகவோ, நிரந்தர மாகவோ ரத்து செய்யப்படும்.

சென்னையில் வாகன விதி மீறல் களை தடுக்க போக்குவரத்து போலீ ஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


அதன்படி அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுதல் உட்பட பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கின்றனர்அதுவும் அபராத தொகையை பணமாக பெறுவது இல்லை.

பணமில்லா பரிவர்த்தனையாக 'ஸ்வைப்பிங்' இயந்திரம் மூலம் அபராத தொகையை வசூலிக்கிறார்கள். மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதத் தொகையை நீதிமன்றத்தில்தான் செலுத்த முடியும்.

இந்நிலையில், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், விதிமீறல்களின் எண் ணிக்கையை குறைக்கவும் சென்னை போக்குவரத்து போலீ ஸார் விரைவில் புதிய நடை முறையை கொண்டுவர திட்டமிட் டுள்ளனர். அதற்கான முதல்கட்ட பணி தொடங்கியுள்ளது.

10 புள்ளிகள்

அதன்படி, இனி வாகன ஓட்டி களின் ஒவ்வொரு விதிமீறலுக்கும் 2 புள்ளிகள் வழங்கப்படும். 10 புள்ளிகளுக்கு மேல் பெற்றால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ரத்து செய்யப்படும். இத்தகைய முறை வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது.

இந்த 'பாயிண்ட் சிஸ்டம்' முறை விரைவில் சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான ஆரம்பக்கட்ட பணி கள் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment