5 மாதத்துக்கு மட்டும் தற்காலிகமாக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 27, 2019

5 மாதத்துக்கு மட்டும் தற்காலிகமாக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம்

அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.


அரசு மற்றும் நகராட்சி நிர்வாகங்களின் கீழ் செயல்படும் மேனிலைப் பள்ளிகளில் நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.


அந்தந்த பள்ளிகளில் செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் இந்த ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வத்துறை இயக்குர் கண்ணப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை:


அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் பணிகள் முடிந்து காலிப்பணியிடங்களை நிரப்ப காலதாமதம் ஏற்படக்கூடும்.


அதனால், இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலன் கருதி, பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதற்காக காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இதன்படி அந்தந்த பள்ளிகளில் செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம், தற்காலிக ஏற்பாடாக முதுநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியான நபர்களை நிரப்பிக் கொள்ள அரசாணை 334ன்படி அனுமதிக்கப்படுகிறது.

* தற்போது அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2449 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதிவு உயர்வு மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரையில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை(5 மாதங்களுக்கு) மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில்,சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களே நிரப்பிக் கொள்ளலாம்.



* தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட 11 பாடங்களுக்கு மட்டுமே நிரப்பிக் கொள்ள வேண்டும்.



* பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
* ஐந்து மாதங்களுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அந்த ஐந்து மாத காலத்துக்கான பாடப்பகுதிகளை நடத்தி முடிக்க வேண்டும்.



* உபரிப் பணியிடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை தகுதி பெற்று ஊக்க ஊதியம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு மேனிலை வகுப்புகளை நடத்த மாற்றுப்பணி வழங்க வேண்டும். அப்படி மாற்றுப் பணியில் நிரப்ப இயலாத நிலையில் உள்ள காலிப் பணியிடங்களில் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் நிரப்ப வேண்டும்

No comments:

Post a Comment