அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ சேர்க்கைக்கான 7,840 காலி இடங்கள்: 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 4, 2019

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ சேர்க்கைக்கான 7,840 காலி இடங்கள்: 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (சனிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "இந்திய அளவிலான தொழிற்பயிற்சி நிலையங்களின் தரத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அகில இந்திய அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடத்தப்பட்ட தர நிர்ணயத் திட்டத்தில் சிறந்த தரமுடைய தொழிற்பயிற்சி நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட 120 தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 40 தொழிற்பயிற்சி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.


அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் ஐந்து இடங்களை தமிழ்நாட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 90-க்கும் அதிகமானோர் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த தொழில் நிறுவனங்களில் ரூ.15,000- க்கும் அதிகமாக ஊதியம் பெற்று வருகின்றனர்.

இன்றைய கால சூழலுக்கேற்பவும் தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்பவும் சில அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது தவிர அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவடையும் தருவாயில் தொழில் நிறுவனங்களில் இலவசப் பயிற்சிஅரசால் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்குப்பின் அதே தொழிற்நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்று வழங்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான மொத்தம் 37,097 இடங்களை நிரப்பிட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு மூலம் முதற்கட்டப் பயிற்சியாளர்கள் சேர்க்கை நிறைவு பெற்றது.


இதன் முடிவில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 7,840 இடங்களும் தனியார் தொழிற்பயற்சி நிலையங்களில் 5,888 இடங்களும் காலியாக உள்ளன.

இந்த காலியிடங்களை நிரப்பிட 02.08.2019 முதல் 20.08.2019 வரை விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

அரசாணை எண். 104 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, நாள்.28.06.2019 மற்றும் அரசாணைஎண். 20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, நாள்.19.01.2019 ஆகிய அரசாணைகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள்பெறப்படவில்லை எனில் அந்த இடங்களை மாற்று இனத்தவரைக்கொண்ட நிரப்பிட ஆணை வழங்கப்பட்டுள்ளது.


 இதனால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இடம் கிடைத்திட வாய்ப்புள்ளது.

எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் சேர்ந்திட www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.08.2019.

இதுகுறித்த கூடுதல் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது தங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.


தொழிற்பயிற்சி நிலையங்களின் விவரங்கள் பயிற்றுவிக்கப்படும் தொழிற்பிரிவுகளின் விவரங்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன", எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் தகவல்களைப் பெற044-22501006 (210, 211, 109) என்ற தொலைபேசி எண்ணும்,detctsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் தரப்பட்டுள்ளது

No comments:

Post a Comment