நாட்டு மக்களிடையே ஆகஸ்ட் 7-ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி: முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 5, 2019

நாட்டு மக்களிடையே ஆகஸ்ட் 7-ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி: முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு?

ஆகஸ்ட் 7-ம் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். 17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தப்பின், பிரதமர் மோடி கடந்த மார்ச் 27-ம் தேதி, நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன்.

 அப்போது, முக்கிய தகவல்களை தெரிவிக்க உள்ளேன், அதனை அனைவரும் டிவி, ரெடியோ, ஊடகங்கள் மூலம் கவனிங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


தேர்தல் விதி அமலில் உள்ளதால் அரசின் கொள்கை முடிவை  வெளியிட முடியாது என்றாலும், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிழவியது. பொதுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நமது  நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை  வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


மிஷன் சக்தி சோதனை இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்றார். விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு  வீழ்த்தும் சோதனை வெற்றியடைந்துள்ளதுவிண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்தது. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு  அடுத்தப்படியாக இந்தியா விண்வெளியில் சாதனை படைத்துள்ளது.


முழுக்க முழுக்க இந்திய  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. உலகின் விண்வெளித்துறையில் 4-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.


குறைந்த உயர சுற்றுப்பாதையில் செயற்கைக் கோளை நிறுத்தி இந்திய ராக்கெட் சாதனை  படைத்துள்ளது. விண்வெளி போர் நடத்துவதற்கான திறனை இந்தியா பெற்றுவிட்டது என்றார்.


தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகவுள்ளார். இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிஸ், திமுக கட்சிகள் கடும் எதிப்பு தெரிவித்துள்ளனர்.


நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தவும் மாநில முதல்வர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆகஸ்ட் 7-ம் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

பிரதமரின் உரையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில்  அனைத்துக்கட்சி கூட்டத்தையும் பிரதமர் மோடி கூட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

No comments:

Post a Comment