சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களை மட்டுமே பள்ளிகள் நடத்த வேண்டும். அதைவிட்டு வேறு பாடங்களை நடத்தினால் அந்த மாணவர்கள் அடுத்த தேர்வை எழுத அனுமதி கிடைக்காது என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே அதற்குரிய பாடங்களை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
குறிப்பாக 9ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பாடங்களும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிளஸ் 2 பாடங்களையும் நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு பொதுவாக உள்ளது. இதன் மூலம் அந்த மாணவர்கள் பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்று பள்ளி நிர்வாகங்கள் கருதுகின்றன.
பெற்றோர் தரப்பில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல புகார்கள் இதுபோல வருவதால் விழித்துக் கொண்ட சிபிஎஸ்இ, தற்போது, சிபிஎஸ்இ அங்கீகாரம் மற்றும் வரையறுத்துள்ள பாடங்களை மட்டுமே 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நடத்த வேண்டும்.
அதை மீறி வேறு பாடங்களை நடத்தவோ, அல்லது அடுத்த வகுப்புக்கான பாடங்களை நடத்தினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. குறிப்பாக 9ம் வகுப்பு(Skill),பிளஸ் 1 வகுப்பு(Academic and Skill) ஆகியவற்றில் சிபிஎஸ்இ அங்கீகரித்துள்ள பாடங்களை மட்டுமே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
இதை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி அந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும். அவர்கள் அந்த தேர்வுகளை எழுத தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.
மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிபிஎஸ்இ அங்கீகாரம் வழங்கியுள்ள பாடங்கள் தொடர்பான பட்டியல் cbseacademic.nic.in/curriculum.html என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
. 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்குவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் அந்த பாடங்களின் பட்டியலை மாணவர்களுக்கு தெரிவித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகே பாடங்களை நடத்த தொடங்க வேண்டும்.

No comments:
Post a Comment